திருப்பல்லாண்டு
உரை :முஷ்டிகன் , சாணூரன் ஆகிய மல்லர்களைக் கொன்று உன் திருத் தோள்களின் பலத்தை நிறுவிய பகவானே !உனக்கு மங்களம் உண்டாகட்டும்.உன் சிவந்த திருவடியின் அழகுக்குப் பல்லாண்டு.மனிதக் கணக்கின் படியான பல்லாண்டுகளும் பல பிரமன்களுடைய பல நூறாயிரம் வருடங்களும் நீ குறைவில்லாத பாதுகாப்புடன் வாழ்க!
2 . அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி
ஆயிரம் பல்லாண்டு;
வடிவாய் நின்வல மார்பினில் வாழ்கின்ற
மங்கையும் பல்லாண்டு;
வடிவார்சோதி வலத் துறையும் சுடர்
ஆழியும் பல்லாண்டு;
படைபோர் புக்கு முழங்கும்அப் பாஞ்ச
சன்னியமும் பல்லாண்டே.
உரை:அடியோங்களுக்கும் உனக்கும் உள்ள பிரிவில்லாத தொடர்பு ஆயிரம் ஆண்டுகள் நிலைக்கட்டும்.உன் வலத் திருமார்பில் வாழ்கின்ற மகாலட்சுமி உன்னுடன் நித்தியமாகக் கூடி இருக்க வேண்டும்.பகவானே ! உன் வலக்கரத்தில் விளங்கும் ஒளி கூடிய சக்கரம் பல்லாண்டுகள் நிலைக்கட்டும்.யுத்தத்தில் புகுந்து முழங்கும் உன் பாஞ்சசன்னிய ஆயுதமும் பல்லாண்டு நிலைக்கட்டும்.
3 .வாழாட்பட்டு நின்றீருள்ளீரேல் வந்து
மண்ணும் மனமும் கொண்மின்;
கூழாட்பட்டு நின்றீர்களை எங்கள்
குழுவினில் புகுத லொட்டோம்;
ஏழாட்காலும் பழிப்பிலோம் நாங்கள்
இராக்கதர் வாழ் இலங்கை
பாழாளாகப் படை பொருதானுக்குப்
பல்லாண்டு கூறுதுமே.
உரை :கைங்கர்யமே உறுதிப்பொருள் என்னும் நோக்கம் உடையவர்கள் ஆகில் ,நீங்கள் திருமுளைத் திருநாளில் புழுதி மண் சுமக்க வாருங்கள்.சோற்று வாழ்விற்காகப் பிறர்க்கு அடிமைப் பட்டிருப்பீர்களாயின்,எங்கள் கூட்டத்திலே சேர அனுமதியோம்.நாங்கள் மூவேழு தலை முறைகளிலும் எவ்விதக் குற்றமும் இன்றி உள்ளோம்.இலங்கையையும் அங்கே வாழ்ந்த அரக்கர்களையும் அழிந்த எம்பிரானுக்கு ,இன்று நாங்கள் திருப்பல்லாண்டு பாடுகிறோம்.
1 . பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
பலகோடி நூறாயிரம் ,
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா !உன்
சேவடி செவ்வி திருக்காப்பு .